திடீரென கண்பார்வை இழந்த சிம்பு பட நடிகை.. என்னதான் ஆச்சு?..

Jasmin bhasin: தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் மட்டும் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இருப்பவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் சில நடிகைகள் ஒரு படம் மட்டும் நடித்துவிட்ட பிறகு, எங்கு தான் சென்றார்கள் என்பது தெரியாமல் போய்விடும்.

மேலும் ஒரு படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் அவர்களின் இணையதள முகவரியை கண்டுபிடித்து, அவர்களை பின் தொடர்வார்கள். அந்த வகையில் அவர்கள் பதிவிடும் புகைப்படத்திற்கும், வீடியோக்களுக்கும் கமெண்ட் செய்தும் லைக்கும் போட்டு வருவார்கள்.

அந்த வகையில் வானம் படத்தில் நடித்த நடிகை ஒருவரின் பரிதாப நிலை தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஜாஸ்மின் பசின்

ஜாஸ்மின் பசின் என்பவர் மாடல் ஆவார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த வானம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். வெள்ளித்திரையில் அறிமுகமான முதல் படம் இதுதான்.

Social Media Bar

அதன் பிறகு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதன் மூலம் ரசிகர்களால் அறியப்பட்ட ஜாஸ்மின் பசின், மீண்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில் ஜங் ஜக் என்னும் தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

ஜாஸ்மின் பசின்

ஜாஸ்மின் பசின் தற்போது பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் அவர் கண்களில் சிகிச்சை பெற்று வந்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 14ஆம் தேதி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டதாகவும், அப்பொழுதுதான் இந்த சிக்கலை அவர் எதிர்கொண்டார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தியதாகவும் பின்பு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

Actress Jasmin Bhasin

மேலும் அந்த நிகழ்ச்சியை தவிர்க்க முடியாத காரணத்தால் எரிச்சலையும் பொருட்படுத்தாமல் தான் கலந்து கொண்டதாகவும், அதன் பிறகு மிகவும் கண்ணில் எரிச்சல் அதிகமானதால், நிகழ்ச்சியின் உதவியாளர்களுடன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றேன் என கூறியுள்ளார்.

அப்பொழுது மருத்துவர்கள் கருவிழி சேதமடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். தற்பொழுது அதற்காக நான் சிகிச்சை எடுத்து வருகிறேன் என்பதை பதிவு செய்திருக்கிறார். அது அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.