Connect with us

விஜயகாந்தை விட நல்ல மனுஷன் ஒருத்தன் இருக்கான்.. ஆனால் அஜித் பண்ணுன சம்பவத்தால்.. விளக்கும் தயாரிப்பாளர்

Manickam Narayanan

Latest News

விஜயகாந்தை விட நல்ல மனுஷன் ஒருத்தன் இருக்கான்.. ஆனால் அஜித் பண்ணுன சம்பவத்தால்.. விளக்கும் தயாரிப்பாளர்

Social Media Bar

Manickam Narayanan: தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவரைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருப்பது ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருக்கு ரசிகர் பட்டாளங்கள் ஏராளமாக உள்ளன.

இவரின் படத்தைப் பற்றிய ஒரு அப்டேட் கிடைத்து விட்டால் போதும் என்ற நிலையில் இருக்கும் அஜித் ரசிகர்கள், அவரின் படத்தைப் பற்றிய அப்டேட் வந்துவிட்டால் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தங்களின் மகிழ்ச்சியை தெரியப்படுத்துவார்கள். அந்த அளவிற்கு நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் உள்ளனர்.

அவரைப் பற்றி இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருப்பது அவரின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

அசல் திரைப்படம்

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சரணின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அசல் திரைப்படம்.

இந்த படத்தில் நடிகர் அஜித் நடிக்க அவருடன் சமீரா ரெட்டி, பாவனா, பிரபு ஆகியோர் படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

ajith kumar

இதனால் அஜித்தை வைத்து படம் தயாரித்த பிரபு அப்போது நஷ்டத்தை சந்தித்தார் என தகவல்கள் வெளிவந்தது. அந்த நஷ்டத்தில் இருந்து மீள்வதற்காக நடிகர் ரஜினியை வைத்து எடுத்த திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் ஓர் ஆண்டுகள் ஓடியும் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து தான் நடிகர் அஜித்தை பற்றி தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு கருத்து ஒன்று தெரிவித்திருக்கிறார்.

மாணிக்கம் நாராயணன்

இவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளராக, கடந்த 1995 ஆம் ஆண்டு வெளிவந்த கூலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

manickam narayanan

இவர் நடிகர் அஜித்தை பற்றி தற்பொழுது கூறியிருப்பதாவது, அசல் படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் அஜித், பிரபுவிற்கு என்ன செய்தார், அவரை எல்லோரும் நல்லவர் என்ற கூறுகின்றனர். பிரபுவை விட நல்ல மனிதர் யாரும் இருக்க முடியாது. மேலும் விஜயகாந்தை எல்லாம் விட, பிரபு ஒரு நல்ல இதயம் கொண்ட மனிதர் என பிரபுவை பற்றியும், விஜயகாந்த் பற்றியும் மற்றும் அஜித்தை பற்றியும் இவ்வாறாக கூறியிருக்கிறார்.

இது நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கேப்டன் விஜயகாந்த் பற்றி, இவர் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையாக உள்ளது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top