எனக்கு வயசு இருக்கு.. அப்படி பார்க்காதீங்க.. மனம் வருந்தும் எதிர்நீச்சல் நடிகை..!

எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கனிகா. இதற்கு முன்பே கனிகா நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அப்படி அவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. மேலும் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என்று எதுவும் கிடைக்கவில்லை. அதனால் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் கனிகா.

இந்த நிலையில்தான் அவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வந்தார். தற்சமயம் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

Social Media Bar

இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இன்ஸ்டாகிராமில் நான் புகைப்படம் போடும்போது என்னிடம் கமெண்ட் செய்யும் ரசிகர்கள் மிகவும் தவறான முறையில் கமெண்ட் செய்கிறார்கள்.

அவர்கள் என்னை எதிர்நீச்சல் ஈஸ்வரியாகவே பார்க்கின்றனர் அதனால் இன்ஸ்டாவில் போடும் புகைப்படங்களுக்கு அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அது ஒரு கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் நான் வேறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருந்தார் என்னை இப்படி தவறான வழியில் பார்க்காதீர்கள் என்றும் அவர் பதில் அளித்து இருந்தார்.