Connect with us

பிரதமரை விமர்சிப்பவர்கள்தான் இப்படி நடந்துக்குவாங்க! –  பரபரப்பை ஏற்படுத்திய குஷ்பு!

kushboo

News

பிரதமரை விமர்சிப்பவர்கள்தான் இப்படி நடந்துக்குவாங்க! –  பரபரப்பை ஏற்படுத்திய குஷ்பு!

Social Media Bar

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை குஷ்பு. பல வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக இருந்து வந்தவர் நடிகை குஷ்பு.

சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார் குஷ்பு, முன்னர் திமுகவில் இருந்த குஷ்பு தற்சமயம் பாஜக கட்சியில் செயல்ப்பட்டு வருகிறார்.

இதனால் அடிக்கடி பிரதமர் மோடிக்கு ஆதரவான பதிவுகளை இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்ட செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில் ஒரு வீடியோவை இணைத்துள்ளார். அதில் வட இந்தியர்களை தமிழ்நாட்டு மக்கள் அடிப்பது தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவிட்டிருந்த குஷ்பு “அரசியம் மற்றும் சமூக ஊடகங்களில் மொழியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது இப்படிதான் நடக்கும். வட இந்தியர்களை தாக்குவது, பிரதமரை இழிவாக பேசுவது இதுதான் இவர்களின் வீரம். இதுக்குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பதிலளித்து வருகின்றனர். பிரதமரை எதிர்ப்பவர்கள் எல்லோரும் வட இந்தியர்களை எதிர்ப்பர்ப்பவர்கள் அல்ல. இருவரையும் குஷ்பு எப்படி சமமாக வைத்து பார்க்கிறார் என தெரியவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top