News
என்னை படுக்கைக்கு அழைக்குறவங்க இதை கேட்டுக்கோங்க – நடிகை கிரண் சர்ச்சை பேட்டி!..
தமிழில் அதிக பிரபலமாகும் அதேசமயம் சில நடிகைகள் வந்த வேகத்திற்கு காணாமல் போவதும் உண்டு. ஏனெனில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்கும் பொழுது அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள் முக்கியமானதாக இருக்க வேண்டும். அவையும் அடுத்து வரவேற்பை பெரும் வகையில் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு வரவேற்பு குறைந்து விடும் அப்படியான வரவேற்பை இழந்த ஒரு நடிகையாக மாறியவர்தான் நடிகை கிரண். ஜெமினி திரைப்படம் நடிகை கிரணுக்கு ஒரு முக்கியமான திரைப்படம் என்று கூறலாம்.
தமிழில் வரவேற்பு:
அந்த திரைப்படம் மூலமாக தமிழ்நாடு அளவில் அதிக மக்கள் மத்தியில் பிரபலமானார் கிரண். ஆனால் அதற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்த கதைகள் பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை. தொடர்ந்து அவருக்கு உடல் பருமன் ஏற்பட்டதை அடுத்து பார்ப்பதற்கு வயதான பெண்ணாக தோற்றமளிக்க துவங்கினார்.

அதனை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகள் குறைய தொடங்கின இருந்தாலும் இயக்குனர் சுந்தர் சி தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் சுத்தமாக வாய்ப்பே இல்லாமல் இருந்து வரும் கிரண் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது இந்த மாதிரியான புகைப்படங்களை நான் வெளியிடுவதை பார்த்து சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள்.
சொகுசு வாழ்க்கை:
அதற்கு நான் ஒப்புக்கொண்டால்தான் பட வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு பட வாய்ப்பு வாங்கிதான் வாழ வேண்டும் என்று எனக்கு எந்த ஒரு தேவையும் கிடையாது. நான் பிறந்தது முதலே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்தான்.

எனது தந்தையும் பெரிய பணக்காரர்தான் இப்பொழுது எனது வாழ்க்கையும் சொகுசு வாழ்க்கையாகத்தான் இருக்கிறது. பணத்துக்காக இவ்வளவுக்கு நான் தரம் தாழ்ந்து போக வேண்டிய தேவை எனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகை கிரண்.
