Connect with us

இயக்குனர் வீட்டுக்கே வந்து கெஞ்சியும் ஒத்துக்கல!.. விஜய் படத்தால் கடுப்பாகி குஷ்பு எடுத்த முடிவு.. இதுவரை தெரியவே இல்லையே!.

kushboo

Latest News

இயக்குனர் வீட்டுக்கே வந்து கெஞ்சியும் ஒத்துக்கல!.. விஜய் படத்தால் கடுப்பாகி குஷ்பு எடுத்த முடிவு.. இதுவரை தெரியவே இல்லையே!.

Social Media Bar

kushboo: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரை அவரின் ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைப்பார்கள்.

விஜய் தொடக்க காலத்தில் சினிமாவிற்குள் நுழையும் பொழுது பலரும் இவரை கேலி கிண்டல்கள் செய்தார்கள். இவரெல்லாம் கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்டார் என கூறிவந்தனர்.

ஆனால் தற்பொழுது நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல், நடனத்திலும் நடன இயக்குனர்களுக்கு இணையாக ஆடக்கூடியவர்.

அந்த வகையில் இவருடன் நடிப்பதற்காக பலரும் காத்திருப்பார்கள். தற்போது விஜயுடன் நடித்த முன்னணி நடிகை வாரிசு படத்தில் நடந்த ஒரு சுவாரசிய தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

வாரிசு படத்தில் குஷ்பூ

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான படம் தான் வாரிசு. இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள்.

ஆனால் வாரிசு படத்தில் நடிகை குஷ்பூ நடித்ததை பற்றி ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார். அதில் நானும், விஜய்யும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. எனக்கு வாரிசு படத்தில் வேறு யாருடனும் காட்சிகள் இல்லை. விஜயுடன் மட்டும் தான் காட்சிகள் இருந்தன.

khushbu varisu

வாரிசு படத்தில் எனக்கும் விஜய்க்கும் உள்ள காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகளாக எடுக்கப்பட்டது. சொல்லப்போனால் நானும், விஜய்யும் அந்த காட்சியில் உண்மையாகவே அழுதுவிட்டோம். அந்த அளவிற்கு எமோஷனலான காட்சியாக எடுக்கப்பட்டது.

ஸ்டிட்டா சொல்லிவிட்டேன்

ஆனால் படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் நானும் விஜய்யும் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன.

அப்போது இயக்குனர் வம்சி என்னுடைய வீட்டிற்கு வந்து படத்தின் நீளம் அதிகமாக உள்ளதால், உங்கள் காட்சிகளை நீக்க வேண்டியதாக இருக்கிறது என என்னிடம் கூறினார்.

khushbu varisu

நான் இயக்குனர் வம்சியிடம் ஸ்டெட்டாக சொல்லிவிட்டேன். அப்படி என்றால் என்னுடைய காட்சி ஒன்று கூட படத்தில் இருக்கக் கூடாது எனக் கூறினேன்.

அதற்கு இயக்குனரும் உறுதியளித்தார். ஒரு காட்சிகள் கூட படத்தில் வைக்க மாட்டேன். உங்கள் புகைப்படம் கூட படத்தில் காட்ட மாட்டேன் என கூறினார். ஆனால் நானும் விஜயும் நடித்த காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமானதாகவும், அழகாகவும் இருந்தது என குஷ்பு தெரிவித்திருந்தார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top