Cinema History
சினிமாவில் இந்த சாதனையெல்லாம் மற்ற நடிகைகளுக்கு கஷ்டம்!.. நடிகை லெட்சுமி செய்த சாதனைகள்!..
Tamil Actress Lakshmi : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் தமிழ் சினிமாவை விடவும் பாலிவுட் சினிமா மிகவும் பிரபலமாக இருந்தது. அப்போது இங்கு நடித்து வந்த நடிகைகள் பலரும் ஹாலிவுட்டில் சென்று எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று நினைத்தனர்.
நடிகை ஸ்ரீ தேவியும் அப்படிதான் பாதியிலேயே பாலிவுட்டிற்கு சென்று பிரபலமானார். ஆனால் பாலிவுட்டில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை என்றால் அது நடிகை லெட்சுமி தான். நடிகை லெட்சுமி வெகு காலங்கள் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்.
கதாநாயகியாக நடிக்க துவங்கி அம்மா வேஷம் வரை நடித்திருக்கிறார் லெட்சுமி. காசேதான் கடவுளடா திரைப்படத்தில் கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய லட்சுமி, படையப்பா திரைப்படத்தில் ஒரு தாயாகவும் சிறப்பாக நடித்திருப்பார் தமிழ் சினிமாவில் வெகுநாட்கள் ஒரு நடிகை நடிப்பது என்பதே கடினமான விஷயமாகும்.

அப்படி இருக்கும் பொழுது லெட்சுமி வெகு காலங்கள் நடித்ததே ஒரு பெரிய சாதனை தான் என்றாலும் அதை தாண்டி சினிமாவில் அவர் செய்த சாதனைகள் பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது இத்தனை வருடம் வருடமாக சினிமாவில் நடித்து அந்த காசில் சாப்பிடுகிறேன் என்பதே ஒரு சாதனைதான், அதையும் தாண்டி எவ்வளவோ படங்களில் நடித்த போதும் இவ்வளவு படங்களில் ஒரு முறை கூட தேதி கொடுத்துவிட்டு அந்த தேதிக்கு நான் நடிக்காமல் போனது கிடையாது.
அதே மாதிரி எந்த ஒரு படப்பிடிப்பிலும் இதுவரை யாரையும் நான் கடிந்து பேசியது கிடையாது சம்பளத்திற்காக ஒரு முறை கூட கவர்ச்சியாக நடித்தது கிடையாது இதெல்லாம் நான் செய்த சாதனைகளாக பார்க்கிறேன் என்று லெட்சுமி கூறி இருக்கிறார் சொல்லப்போனால் மற்ற நடிகைகளால் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா என்பதை கேள்வி குறிதான் என கூறப்படுகிறது.
