Connect with us

சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் மக்கள் கொடுத்தது கிடையாது.. ரஜினி படத்தில் நடந்த சம்பவத்தால் கடுப்பான நடிகை.. நயன் தாராதான் முக்கிய காரணமாம்..!

rajinikanth mamitha

News

சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் மக்கள் கொடுத்தது கிடையாது.. ரஜினி படத்தில் நடந்த சம்பவத்தால் கடுப்பான நடிகை.. நயன் தாராதான் முக்கிய காரணமாம்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்து தற்சமயம் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றிருப்பவர் மம்தா மோகன்தாஸ். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பெரிய நடிகரின் படம் என்று நம்பி போய் மோசம் போன ஒரு திரைப்படத்தின் அனுபவத்தை குறித்து இவர் தனது பேட்டியில் பேசியிருக்கிறார்.

ரஜினி படத்தில் வாய்ப்பு:

இது அதிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது குசேலன் என்கிற திரைப்படம் ஒன்றில் ரஜினிகாந்த் நடித்த பொழுது அதில் பல நடிகைகள் சேர்ந்து ஆடுவது போன்ற பாடல் ஒன்று படமாக்கப்பட இருந்தது. அதில் ஒரு நடிகையாக மம்தா மோகன்தாசும் ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ரஜினியின் திரைப்படத்திலிருந்து வாய்ப்பு வரும் பொழுது எந்த ஒரு நடிகை வேண்டாம் என்று கூறுவார்கள். ஏற்கனவே நடித்து கொண்டிருந்த திரைப்படத்தில் நான்கு நாட்கள் அனுமதி வாங்கிவிட்டு குசேலன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வந்திருந்தார் மம்தா.

ஆனால் 4 நாட்களில் மூன்று நாட்கள் அவர்களை வைத்து எந்த ஒரு கட்சியும் படம்பிடிக்கவில்லை. அதன் பிறகு ஒரு நாள் மட்டும் சில காட்சிகளை படம் பிடித்து விட்டு அவரை அனுப்பிவிட்டார். ஆனால் அதுவும் திரைப்படத்தில் வரவில்லை.

நடிகை செய்த வேலை:

பிறகு இது குறித்து விசாரித்த பொழுதுதான் அந்த திரைப்படத்தில் நடித்த வேறு ஒரு நடிகை என்னோடு சேர்ந்து வேறு நடிகைகள் ஆடினால் நான் அந்த படத்திற்கு வரமாட்டேன் என்று கூறி கண்டிஷன் போட்டுள்ளார். அதனால்தான் தனது வாய்ப்பு போய் உள்ளது என்பது அறிந்ததாக கூறுகிறார் மம்தா.

அந்த நடிகை வேறு யாருமில்லை நயன்தாராதான் என்று கூறப்படுகிறது அதனை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு பிறகு ரஜினி சாரிடமிருந்து எனக்கு போன் வந்தது படத்தில் நடிக்க வந்ததற்கு நன்றி என்றும் கூறிவிட்டு வைத்துவிட்டார்.

எனக்கு மட்டும் இது போல் நடக்கவில்லை நிறைய நடிகைகளுக்கு இப்படி நடக்கிறது சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் இவர்களுக்கு மக்கள் கொடுக்கவில்லை அவர்களாக போட்டுக்கிட்டதுதான் என்று கூறுகிறார் மம்தா மோகன்தாஸ்.

To Top