Tamil Cinema News
பாலியல் தொல்லை கொடுத்துட்டு இந்த வேலையெல்லாம் பார்க்க கூடாது!. சீனுராமசாமியை வச்சு செஞ்ச பத்திரிக்கையாளர்!..
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. தமிழில் தென்மேற்கு பருவக்காற்று என்னும் திரைப்படம் மூலமாகதான் சீனுராமசாமி, விஜய் சேதுபதி இருவருமே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள்.
அதற்கு பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்த சீனுராமசாமி தற்சமயம் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் இடம் பொருள் ஏவல் என்கிற திரைப்படத்தை இயக்கும்போது அதில் நடித்த நடிகை மனிஷா யாதவற்க்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
இதனையடுத்து பல வேலைகளை ஓரமாக பார்த்துள்ளார் சீனுராமசாமி என்று தற்சமயம் தனது மற்றொரு பேட்டியில் பிஸ்மி உடைத்துள்ளார். பிஸ்மி கூறுவதை அறிந்த குமுதம் நிறுவனம் இந்த நிகழ்வு தொடர்பாக அவரை பேட்டி எடுத்தது. அந்த பேட்டி மிகவும் ட்ரெணடானது. இந்த விஷயத்தை அறிந்த சீனு ராமசாமி முதலில் பிஸ்மியை தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே குமுதம் நிறுவனத்திற்கு போன் செய்து அந்த விடியோவை நீக்க வைத்துள்ளார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது “மனிஷா குறித்து அவர் கூறுவது பொய். ஒரு விருது வழங்கும் விழாவில் கூட மனிஷா என்னை குறித்து நல்ல விதமாக பேசியுள்ளார். மேலும் அடுத்தும் நான் மனிஷாவை வைத்து படம் இயக்குவேன்” என்று கூறிய சீனுராமசாமிக்கு நடிகை மனிஷாவே பதிலடி கொடுத்தார்.

இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்த மனிஷா, அன்று சீனுராமசாமியும் அந்த மேடையில் இருந்தார். எனவே நான் அவருக்கு நன்றி கூறினேன். ஆனால் 9 வருடங்களுக்கு முன்பு நடந்த எதையும் நான் மறக்கவில்லை. என்னிடம் மரியாதை குறைவாக நடந்த உங்களுடன் என்னால் நடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் பேசிய பிஸ்மி, இதன் மூலமாக சீனுராமசாமியின் நிஜ முகத்தை வெளிக்காட்டியுள்ளார்.
