News
வெகு நாட்கள் கழித்து ரீ எண்ட்ரி – சந்தானம் படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷ்!
தமிழ் சினிமாவிற்குள் வந்த உடனேயே மக்கள் மத்தியில் பெரும் அழையை கிளப்பியவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழில் முதன் முதலில் பேட்ட திரைப்படத்தில் உதவி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் மேகா ஆகாஷ்.

அதன் பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனையடுத்து அவருக்கான ரசிக வட்டாரமானது விரிவடைந்தது. பட வாய்ப்புகளும் இவருக்கு அதிகமாக வந்தன.
அதன் பிறகு பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. ஆனாலும் மற்ற மொழிகளில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தற்சமயம் நடிகர் சந்தானம் நடித்து தயாராகிவரும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் இவர் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே சந்தானம் படத்திற்கு சினிமா ரசிகர்களிடையே ஒரு வரவேற்பு உண்டு. அதை இன்னும் அதிகரித்துள்ளது இந்த செய்தி.
