Connect with us

அது இல்லாம சினிமால இருக்குறதுக்கு டீக்கடை வைக்கலாம்.. கடுப்பான தங்கலான் பட நடிகை..

Parvathy

News

அது இல்லாம சினிமால இருக்குறதுக்கு டீக்கடை வைக்கலாம்.. கடுப்பான தங்கலான் பட நடிகை..

Social Media Bar

Parvathy: சினிமாவில் சில நடிகைகள் தங்களுக்கு தோன்றுகின்ற கருத்தை தைரியமாக பேசுவதில் என்றும் தயங்குவதில்லை. மேலும் அதனால் பல சர்ச்சைகள் வந்தாலும் அவர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசிவிட்டு செல்வார்கள்.

இதன் மூலம் அவர்கள் சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுவார்கள். ஒரு சில நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு வரைமுறை வைத்திருக்கிறார்கள். அதை பின்பற்றி ஒர சில நடிகைகள் சினிமாவில் இன்னும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமா நடிகை ஒருவர் சினிமாவிற்கு வரவில்லை என்றால் டீக்கடை வைத்திருப்பேன் என கூறியிருப்பது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. யார் அவர் எதற்காக அப்படி சொன்னார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை பார்வதி

இவர் பார்வதி திருவோத்து, பார்வதி மேனன் அல்லது பார்வதி என்று அறியப்படுகிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார். முதன்முதலில் அவுட் ஆப் சிலபஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

Parvathy

தமிழ் திரைப்படமான பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். பூ திரைப்படத்திற்காக தமிழில் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார். அதோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் பார்வதி, தற்பொழுது கூறி இருக்கும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்களின் மத்தியில் பேசு பொருளாகி வருகிறது.

டீக்கடை வைத்திருப்பேன்

சினிமாவில் தனக்கு கண்ணியம் இல்லாத நிலை வந்தால் சினிமாவை விட்டு வெளியேறிடுவேன் என பார்வதி தெரிவித்திருக்கிறார். மேலும் சினிமாவிற்கு நான் வரவில்லை என்றால் நிச்சயம் டீக்கடை வைத்திருப்பேன். நான் எந்த தொழில் செய்தாலும் அல்லது எந்த வேலை பார்த்தாலும் எனக்கு கண்ணியம் தான் முக்கியம். திரைத்துறையில் கண்ணியம் இல்லாத நிலை ஏற்பட்டால் இங்கிருந்து வெளியேறி விடுவேன் என நடிகை பார்வதி கூறி இருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top