ஆரம்பத்தில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆடிக்கிட்டு இருந்தேன்.. குக் வித் கோமாளி பவித்ராவின் காணாத பக்கங்கள்!..

விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதை பார்க்க முடியும். அதே போல பிரபலங்களும் கூட விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மேல் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஏனெனில் ஒரு நிகழ்ச்சி என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் ஒருவர் பிரபலமாவதற்கு விஜய் டிவி நிகழ்ச்சிகள் உதவியாக இருக்கின்றன.

சந்தானம் சிவகார்த்திகேயன் போன்ற பலரும் தற்சமயம் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களாக இருப்பதற்கு உதவியாக இருந்த டிவி சேனலாக விஜய் டிவி உள்ளது. இதில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் முக்கியமானவை.

அப்படி குக் வித் கோமாளி தொடர் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவித்ரா. அதன் பிறகு பவித்ராவிற்காக ஒரு ரசிக பட்டாளமே உருவானது. ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்துள்ளார் நடிகை பவித்ரா.

முதலில் கிராம புரங்களில் நடக்கும் ஆடல் நிகழ்ச்சிகளில் 500 ரூபாய் சம்பளத்திற்கு ஆடி வந்தவர் பவித்ரா. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான் சினிமாவில் கால் பதித்துள்ளார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.