News
தளபதி வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு வாங்கிய நெருங்கிய நடிகை!.. த்ரிஷாவுக்கு போட்டி போல.. யார் தெரியுமா?
Actor Vijay: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தன் தந்தையின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.
ஆரம்பத்தில் இவரைப் பார்த்தவர்கள் இவரெல்லாம் கதாநாயகன் முகத்திற்கு செட்டாக மாட்டார் என்றும் பலரும் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
ஆனால் தற்பொழுது இவரின் ரசிகர்கள் கோடி கணக்கில் உலகெங்கிலும் உள்ளார்கள்.
அது மட்டுமல்லாமல் சினிமாவில் பிஸியாக இருந்து வந்த நடிகர் விஜய், தற்பொழுது அரசியலில் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியலில் முழு நேரமாக அவரது பணியை தொடங்க உள்ளார்.
அதனால் தான் நடிக்கும் கடைசி படமாக கோட் படத்தை அவர் கூறியிருந்தார்.
மேலும் சினிமாவில் இருந்து முழுமையாக விலகப் போவதாக அறிவித்தை தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் பாராட்டியும், ஒரு சிலர் அவர்களின் வேதனையை தெரிவித்தும் வருகிறார்கள். இனிமேல் எங்கள் தளபதியை பெரிய திரையில் பார்க்க முடியாது என்று தங்ளின் சோகத்தை தெரிவித்து வருகிறார்கள்.
தளபதியும் சர்ச்சையும்
ஒரு பக்கம் சினிமா, அரசியல் என்று விஜய் பிஸியாக இருந்தாலும், தற்பொழுது கிசுகிசுவிலும் மாட்டி வருகிறார். அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து நடித்த திரிஷா, கில்லி படத்தில் பிறகு மீண்டும் விஜயுடன் லியோ படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

அதன் பிறகு கிள்ளியும் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு விஜய் மற்றும் திரிஷா லிப்டில் உள்ள புகைப்படங்கள் வெளிவந்து சர்ச்சை கிளப்பிய நிலையில், விஜய் அலுவலகத்திற்காக வாங்கி அப்பார்ட்மெண்டில், திரிஷாவும் ஒரு பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார். அது மேலும் சர்ச்சையே கிளப்பி உள்ளது.
அழகிய லைலா
இந்நிலையில் திரிஷாவிற்கு டப் கொடுக்கும் வகையில் மீண்டும் விஜய் வாங்கிய அப்பார்ட்மெண்டின் பக்கத்தில் ஒரு வீடு வாங்கி குடியேற இருக்கிறார் பிரபல நடிகை ரம்பா. ரம்பா மற்றும் விஜய் இருவரும் மின்சார கண்ணா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளனர்.

ரம்பா திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், தற்பொழுது கணவர் குழந்தைகளுடன் விஜயின் வீட்டு பக்கத்திலேயே வீடு ஒன்றை வாங்கி குடியேற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் ரம்பா தனது குடும்பத்துடன் விஜயை சந்தித்து புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
