Connect with us

எனக்கு வேலை இருக்கு!.. தேர்தலில் போட்டியிட வேண்டாம்!.. ஆர்.கே செல்வமணிக்கு நோ சொன்ன ரோஜா!..

rk selvamani roja

News

எனக்கு வேலை இருக்கு!.. தேர்தலில் போட்டியிட வேண்டாம்!.. ஆர்.கே செல்வமணிக்கு நோ சொன்ன ரோஜா!..

Social Media Bar

RK Selvamani and Actress Roja : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு துறைக்கும் தனி தனி தலைவர்கள், தனி தனி தேர்தல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் மக்களுக்கு நடிகர் சங்கம் மட்டுமே தெரிந்திருக்கும். நடிகர் சங்க தேர்தல் கொஞ்சம் பரவலாக மக்கள் அறிந்த தேர்தல் ஆகும்.

அதேபோல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் திரைத்துறை ஊழியர்கள் என்று பலருக்கும் தனித்தனி சங்கங்கள் உண்டு. இந்த நிலையில் தமிழ்நாட்டு இயக்குனர்களுக்கான தேர்தல் தற்சமயம் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் இதற்கு முன்பு வெற்றி பெற்று தலைவராக இருந்தவர் ஆர்.கே செல்வமணி.

Vishal, Arjun, Samantha At The Irumbuthirai Success Meet

ஆர்.கே செல்வமணி தமிழில் விஜயகாந்த் திரைப்படம் புலன்விசாரணை மூலமாக அறிமுகமானவர். அதன் பிறகு கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என நிறைய படங்களை இயக்கியிருக்கிறார். இவர் நடிகை ரோஜாவின் கணவர் ஆவார்.

நடிகை ரோஜா எடுத்த முடிவு:

இந்த நிலையில் இயக்குனர்கள் மத்தியில் ஆர்.கே செல்வமணிக்கு வெகுவாக வரவேற்பு இருந்தும் கூட இந்த முறை தேர்தலில் நிற்கவில்லை என்று கூறிவிட்டார் ஆர்.கே செல்வமணி. அதற்கு காரணம் என்னவென்று கேட்கும் பொழுது அடுத்து வரும் இளைய தலைமுறை இயக்குனர்கள் பதவியேற்று போக வேண்டும் அப்பொழுதுதான் சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஆர்.கே செல்வமணி.

ஆனால் உண்மை என்னவென்று பார்க்கும் பொழுது நடிகை ரோஜா அவரது தொகுதியில் தற்சமயம் போட்டியிட இருக்கிறாராம். அதிகபட்சம் ரோஜா அரசியலில் போட்டியிடும் பொழுது அரசியல் பணிகளை எல்லாம் ஆர்கே செல்வமணிதான் பார்த்துக் கொள்வார்.

ஆனால் ஆர்.கே செல்வமணி தற்சமயம் இயக்குனர் தேர்தலில் நின்றால் அப்போது ரோஜாவிற்கு அரசியல் பணிகளை பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்காது என்பதால் ரோஜா இந்த முறை இயக்குனர் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது இதனால் தான் ஆர்.கே செல்வமணி தேர்தலில் இருந்து பின்வாங்கி இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

Articles

parle g
madampatty rangaraj
To Top