Bigg Boss Tamil
ப்ளான் பண்ணி முடிச்சிவிட்டுட்டு இப்ப என்னடா ஃபீலிங்… ஒரு நாள் முழுக்க உருட்டும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. கடுப்பில் ரசிகர்கள்..
பிக் பாஸ் நிகழ்ச்சியானது துவங்கிய முதல் நாளில் இருந்தே அதிக வரவேற்பு பெற்று சென்று கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை புதிதாக போட்டி தொடங்கிய முதல் நாளே போட்டியாளர்களில் யாராவது ஒருவரை எலிமினேட் செய்து விடுவோம் என்று ஒரு முக்கிய டாஸ்க்கை வைத்தனர். போட்டி துவங்கி 24 மணி நேரத்தில் இது நடக்கும் என்று கூறப்பட்டது.
முதல் நாளே போட்டி:
இதனால் போட்டியாளர்கள் பலருக்கும் இது பயத்தை ஏற்படும் ஒரு விஷயமாக இருந்தது. ஏனெனில் போட்டிக்கு வந்த அனைவருமே 16 நாட்கள் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனக்கென தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்தனர்.
அவர்கள் எவ்வளவு நாள் இருக்கிறார்களோ அதை பொறுத்துதான் அவர்களுக்கான சம்பளமும் நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று நடிகை சாச்சனா வெளியேற்றப்பட்டார். போட்டியாளர்கள் ஓட்டு போட்டதன் காரணமாகதான் அவர் வெளியேற்றப்பட்டார்.
ப்ளான் பண்ணி பண்ணுன வேலை:
ஆனால் அவர் வெளியேறிய பிறகு அது குறித்து பிக் பாஸில் உள்ள ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனியாக வருத்தப்பட துவங்கினர். முதலில் ஆர்னவ் இது குறித்து கவலைப்பட்டு அழுது கொண்டிருந்தார். பிறகு பேட்மேன் ரவீந்திரன் இது குறித்து மிகவும் கவலைப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் இதையெல்லாம் பார்த்து வந்த ரசிகர்கள் நீங்க எல்லாம் சேர்ந்து பிளான் பண்ணிதானே அந்த பொண்ணை வெளியில் அனுப்பினீர்கள். இப்ப என்ன எல்லாம் நல்லவன் மாதிரி நடிக்கிறீர்கள் என்று கேட்டிருந்தனர். மேலும் சின்ன பெண் என்பதால் ஈசியாக ஏமாற்றி வெளியில் அனுப்பி விட்டனர் என்றும் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
