நடிக்கும்போது புடவையில் கை வைக்கிறாங்க!.. வேதனையுடன் கூறிய வாத்தி பட நடிகை!..
2016 ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் என்கிற திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சம்யூக்தா. அதற்கு பிறகு மலையாளத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் இவர் நடித்தார். 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜீலை காற்றில் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
ஆனால் 2023 இல் இவர் நடித்த வாத்தி திரைப்படம்தான் இவருக்கு தமிழில் வரவேற்பை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு மற்ற மொழிகளில் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வருகின்றன.
இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்து வருகிறார் சம்யுக்தா. இவர் ஒரு பேட்டியில் கூறும்போது நான் மலையாள திரைப்படங்களில் நடிக்கும்போது அங்கு பெரிதாக மேக்கப் எல்லாம் போட மாட்டார்கள்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் நிறைய மேக்கப் போடுகிறார்கள். இதனால் தயாராவதற்கே அதிக நேரம் ஆகிறது. பிறகு எல்லாம் முடிந்து படப்பிடிப்பு துவங்கியவுடன் நாம் மனதை நடிப்பதற்கு தயார் படுத்தி நின்றுக்கொண்டிருப்போம்.
அப்போதுதான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்து புடவை சரியாக இல்லை என புடவையை சரி செய்வார். இப்படியெல்லாம் செய்யும்போது அதில் நடிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்கிறார் சம்யுக்தா.