Connect with us

அம்மாவை தேடி கனவுலகம் செல்லும் சிறுவனின் கதை!.. The Boy and the Heron திரைப்பட விமர்சனம்!..

the-boy-and-the-heron

Hollywood Cinema news

அம்மாவை தேடி கனவுலகம் செல்லும் சிறுவனின் கதை!.. The Boy and the Heron திரைப்பட விமர்சனம்!..

Social Media Bar

ஜப்பானில் பிரபலமான இயக்குனரான ஹயாயோ மியாசகியின் மற்றுமொரு படைப்புதான் இந்த பாய் அண்ட் த ஹெரான் திரைப்படம். ஏற்கனவே இவர் இயக்கிய ஸ்ப்ரிட்டட் அவே என்கிற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

இந்த நிலையில் போன வருடத்திற்கான சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது த பாய் அண்ட் த ஹெரான் திரைப்படத்திற்கு கிடைத்தது. 14 ஜூலை 2023 அன்று ஜப்பானில் வெளியான இந்த திரைப்படம் தற்சமயம் இந்தியாவிலும் வெளியாகியுள்ளது.

படத்தின் கதை:

பசிபிக் போர் நடந்துக்கொண்டிருக்கும்போது டோக்கியோவில் ஒரு மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளாகிறது. மகிட்டோ மகி என்னும் சிறுவனின் தாய் ஹிசாகோ அந்த மருத்துவமனையில் இறக்கிறாள். இதனை தொடர்ந்து மகிட்டோவின் தந்தை ஹிசாகோவின் தங்கையான நட்சுகோவை திருமணம் செய்துக்கொண்டு வேறு ஒரு வீட்டுக்கு குடும்பமாக குடி மாறுகிறார்.

அங்கு ஒரு வித்தியாசமான பேசும் ஹெரான் பறவையை பார்க்கிறான் மகிட்டோ. அந்த சமயத்தில் இருந்து அவனது வாழ்க்கையில் வித்தியாசமான நிகழ்வுகள் நடக்க துவங்குகின்றன.

அவனது தாய் உயிரோடு இருப்பதாக அந்த பறவை கூறுகிறது. இதற்கு நடுவே நட்சுகோவும் திடீரென காணாமல் போக அந்த ஹெரான் பறவைதான் இதற்கு காரணம் என அதை தேடி ஒரு மாயாஜால உலகில் பயணிக்கிறான் மகிட்டோ. இந்த மாயாஜால உலகம் எப்படி உருவானது. அதில் மகிட்டோவால் எப்படி வர முடிந்தது. அவன் தனது தாயையும் சித்தியையும் கண்டறிந்தானா என்பதே கதை களமாக இருக்கிறது.

பொதுவாகவே மியாசாகியின் கற்பனை உலகம் பார்ப்பவரை வேறொரு உலகத்திற்கு அழைத்து செல்லும். அந்த வகையில் அதை திருப்திகரமாக செய்துள்ளது இந்த திரைப்படம்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top