நயன்தாரா வந்ததால் என் காதல் கதை தடம் மாறிடுச்சு.. சிம்பு குறித்து மனம் திறந்த நடிகை சந்தியா.!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிம்பு. சிம்பு ஆரம்பத்தில் டி.ஆர் போலவே நடித்து வந்தார் என்றாலும் கூட போக போக தனக்கென தனி நடிப்பை அவர் உருவாக்கி கொண்டார்.

மன்மதன் திரைப்படத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து காதல் திரைப்படங்களாக நடிக்க துவங்கினார். அப்போது அவர் நடித்த கோவில், சரவணா, குத்து மாதிரியான படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை கொடுத்து வந்தது.

ஆனால் கொரோனா காலக்கட்டங்களுக்கு முன்பு சிம்புவின் உடல் எடை அதிகரித்தது. மேலும் திரைப்படங்களுக்கும் சரியாக நடிக்க வருவதில்லை என அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இந்த நிலையில் வாய்ப்புகளை இழக்க துவங்கினார்.

Social Media Bar

இப்போதுதான் மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் சிம்பு.  தொடர்ந்து இப்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவருடன் நடித்தது குறித்து நடிகை சந்தியா பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஆரம்பத்தில் வல்லவன் திரைப்படத்தில் நான் தான் கதாநாயகியாக நடிக்க இருந்தேன். என்னை காதலிக்கும் சிம்பு என்னை கடத்துவது போல எல்லாம் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் நயன்தாரா வந்த பிறகு மொத்தமாக கதையை மாற்றினார் சிம்பு. அதனால் எனக்கு அந்த படத்தில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது என கூறியுள்ளார் சந்தியா.