Connect with us

விஜயகாந்த் படப்பிடிப்பில் அரிவாளோடு புகுந்த கும்பல்!.. துணிச்சலாக கேப்டன் செய்த விஷயம்!.

vijayakanth

Cinema History

விஜயகாந்த் படப்பிடிப்பில் அரிவாளோடு புகுந்த கும்பல்!.. துணிச்சலாக கேப்டன் செய்த விஷயம்!.

Social Media Bar

Vijayakanth Movie shoot: தமிழில் உள்ள சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். சின்ன கிராமங்களில் இருந்து தமிழ் சினிமாக்கு வாழ்க்கை தேடி வந்த நடிகர்களில் விஜயகாந்த்தும் ஒருவர். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் பசியால் உணவிற்கு மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.

இதனை அடுத்து சினிமாவில் யாருக்கும் அப்படி ஒரு கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக பெரிய நடிகரான பிறகு மூன்று வேளையும் பலருக்கும் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். அவர் நடித்த திரைப்படங்கள் அப்பதெல்லாம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தன.

சொல்ல போனால் ரஜினி கமலை விட விஜயகாந்தின் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. ஒரு வகையில் இது அவர்களுக்கே பயத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று பேசப்படுகிறது. ஒரே வருடத்தில் 18 திரைப்படங்கள் எல்லாம் நடித்த வெளியிட்டு இருக்கிறார்கள் விஜயகாந்த்.

இந்த நிலையில் அவருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகை சத்திய பிரியா. விஜயகாந்தின் ஒரு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு கும்பல் கையில் அருவாளோடு படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்து விட்டனர்.

அவர்கள் யாரோ ஒரு நபரை வெட்டுவதற்காக வந்திருந்தனர். அதனை பார்த்த படக்குழுவினர் அனைவரும் போய் ஒளிந்து விட்டனர் ஆனால் விஜயகாந்த் எதற்கும் பயப்படாமல் நேராக வந்து அங்கிருந்த பெண்களை எல்லாம் அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் உட்கார வைத்தார். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் கேப்டன் சரியாக இருப்பார் என்று அந்த பேட்டியில் ஒரு இருக்கிறார் சத்திய பிரியா.

To Top