Cinema History
சின்ன வயது நடிகை காலில் விழுந்த எம்.ஜி.ஆர்!.. கண்ணீர் விட்டு அழுத நடிகை!..
தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர் இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சினிமாவில் நிறைய நன்மைகளை செய்துள்ளார். இவர் செய்த நன்மையின் காரணமாகவே தமிழகத்தில் அரசியலில் கால் பதிக்க அவரால் முடிந்தது.
தொடர்ந்து அரசியல் மூலம் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். சினிமாவில் நடிக்கும் பொழுது பாரபட்சம் பார்க்காமல் நடிக்க கூடியவர் எம்.ஜி.ஆ.ர் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.
இந்த நிலையில் அப்போதுதான் சினிமாவில் நடிக்க துவங்கியிருந்தார் நடிகை எஸ்.என் லக்ஷ்மி. எஸ் என் லட்சுமியை பொருத்தவரை அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். தொடர்ந்து அவருக்கு அப்போதே வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.
ஆனால் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இளமை காலங்களிலேயே அவருக்கு வந்தன. இளமையிலேயே தாயாக நடிக்கக்கூடிய முதிர்ச்சியும் எஸ் என் லெட்சுமியிடம் இருந்தது இதனால் தாய்க்கு தலை மகன் என்கிற எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்தார் எஸ் என் லட்சுமி.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் எம்.ஜி.ஆரை விட குறைவான வயதுடையவர் எஸ்.என் லெட்சுமி. அவ்வளவு இளமையிலேயே எம்.ஜி.ஆருக்கு தாயாக நடித்தார். அதில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் தனது தாயின் காலில் விழுவது போன்ற காட்சி இருக்கும்.
அப்பொழுது எம்ஜிஆர் எந்த தயக்கமும் இல்லாமல் எஸ்.என் லட்சுமியின் காலில் விழுந்தார் அதனால் அதிர்ச்சியான எஸ்.என் லட்சுமி பிறகு அழ துவங்கிவிட்டார். இவ்வளவு பெரிய மனிதர் நமது காலில் விழுந்துவிட்டாரே என்கிற வருத்தம் அவருக்கு.
பிறகு அவரை சமாதானப்படுத்திய எம்.ஜி.ஆர் நீங்கள் அம்மா கதா பாத்திரத்தில் நடிக்கும் பொழுது நான் காலில் விழுவதில் தவறு இல்லை அது நடிப்புக்காக தானே என்று சமாதானப்படுத்தியுள்ளார்.
