Tamil Cinema News
4 வருஷம் என் வாழ்க்கையில் நடந்த கொடுமை.. காதலையே வெறுத்துட்டேன்.. நடிகை சோனா ஓப்பன் டாக்.!
நடிகை சோனா தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக வாய்ப்புகள் தேடி வந்த நடிகைகளின் மிக முக்கியமானவர் ஆவார். ஆரம்பத்தில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார் நடிகை சோனா.
ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் என்பதே கிடைக்கவில்லை. கடந்த 20 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் சோனா.
ஆனால் கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் நடித்த ஒரு திரைப்படம் அதிக சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகள் என்பது மொத்தமாக இல்லாமல் போனது. இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்.
அந்த படத்தின் கதை என்னவென்று தெரியாமலேயே நான் நடித்து விட்டேன் என்று பத்துக்கு பத்து என்கிற அந்த திரைப்படம் குறித்து அவர் பேசியிருந்தார். தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்த சோனா கூறும் பொழுது ஏழு வருடங்களாக ஒருவரை காதலித்து பிறகு திருமணம் செய்தேன்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். நான்கு வருடங்களாக அவரது கொடுமையை தாங்கிக்கொண்டு வாழ்ந்து வந்தேன். அதற்கு பிறகு காதல் மீது எனக்கு இருந்த ஆசையே போய்விட்டது பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் சோனா.
