News
வாரிசு நடிகருக்கு ஜோடியாக மடக்கி தட்டு கதாநாயகி… யோகம்தான்!..
தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறமை மற்றும் நடன திறமையின் காரணமாக தெலுங்கு சினிமாவில் பேசப்படும் நடிகையாக மாறியவர் நடிகை ஸ்ரீ லீலா.
உடம்பை பாம்பு போல வளைத்து நெளித்து ஆட கூடியவர் நடிகை ஸ்ரீ லலிதா என்பதால் அவருடன் நடிக்கும் நடிகர்களாலேயே அவருக்கு இணையான ஒரு நடனத்தை ஆட முடியாது என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் அவர் ஆடியிருந்த பாடல்கள் எல்லாமே பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தன. இதனை தொடர்ந்து தென்னிந்தியா மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் கவனம் பெரும் ஒரு நடிகையாக மாறியிருக்கிறார் ஸ்ரீ லீலா.
ஸ்ரீ லீலா பாலிவுட் எண்ட்ரி:
இந்த நிலையில் அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார் ஸ்ரீ லீலா என்று ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இருந்தன. இதற்கு நடுவே நடிகர் சைஃப் அலிக்கான் மகனான இப்ராஹீம் அலிக்கான் நடிக்கும் திரைப்படத்திலும் ஸ்ரீ லீலா தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

தற்சமயம் பாலிவுட்டில் இருக்கும் நடிகர்கள் தங்களுக்கு அடுத்த தலைமுறை வாரிசுகளை களம் இறங்குவதற்கு ஸ்ரீலிலாவை முக்கியமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் பாலிவுட்டில் அட்ஜஸ்ட்மென்ட்களுக்கு பஞ்சமே கிடையாது என்பதால் ஸ்ரீ லீலாவின் நிலை அங்கு எப்படி இருக்கும் என்பது இன்னும் தெரியாத விஷயமாகவே இருக்கிறது.
