Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடையும் நடிகைகள் ஒரு பக்கம் என்றால் சர்ச்சை மூலமாக பிரபலமடையும் நடிகைகள் மற்றொரு பக்கம் என்கிற நிலை இருக்கிறது.

நடிகை நயன்தாரா கூட சமீபத்தில் தனுஷ் குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். அவர் நடித்த ஆவணப்படமான நயன் தாரா பிகைண்ட் த ஃபேரிடேல்ஸ் படத்தை பிரபலப்படுத்தவே நயன்தாரா அப்படி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அதே மாதிரி அவ்வப்போது சர்ச்சைகள் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஆரம்பத்தில் தமிழ் தெலுங்கு என்று இரண்டு சினிமா துறையிலுமே இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் பிறகு கொஞ்ச காலங்களிலேயே இவருக்கு மார்க்கெட் என்பது குறைய துவங்கியது.

Read More:  நான் ரொம்ப ஆடிப்போன காட்சி அது.. விஜய் சேதுபதியை பிரமிக்க வைத்த திரைப்படம்..!

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் விஷாலை விமர்சிக்கும் வகையில் பல விஷயங்களை பேசியிருந்தார் ஸ்ரீ ரெட்டி. அது அதிக வைரலானது. இப்போது வரை ஸ்ரீ ரெட்டிக்கும் விஷாலுக்கும் இருக்கும் பஞ்சாயத்து என்பது ஓயவில்லை.

சமீபத்தில் கேரள சினிமாவில் நடந்த பாலியல் பிரச்சனைகள் குறித்து விஷால் குரல் கொடுத்தப்போதும் கூட ஸ்ரீ ரெட்டி விஷாலை விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் தனக்கு நடந்த அனுபவங்களை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது ஒரு பிரபலமான தெலுங்கு நடிகர், அவருடன் சேர்ந்து நான் ரீல்ஸ் எல்லாம் போட்டு உள்ளேன்.

Read More:  மாநாடு நடிகை நடிப்பில் வரும் மாயாஜால சூப்பர் ஹீரோ படம்.. Lokah - Chapter 1 - Chandra

இந்த நிலையில் அவர் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி அவரது படுக்கைக்கு அழைத்து சென்றார். அங்கு என்னை நன்றாக பயன்படுத்தி கொண்டார். அது மட்டுமின்றி அவரது ஆணுறையை என்னிடம் கொடுத்து அதை சுத்தம் செய்து தரும்படி கேட்டார்.

அதை நான் செய்யவில்லை. உடனே என்னை விட்டு விட்டு அந்த ஹோட்டல் அறையை விட்டு சென்றுவிட்டார். அந்த ஹோட்டலில் தங்கிய கட்டணத்தை கூட அவர் கொடுக்கவில்லை. எனக்கு சாப்பாடு கூட வாங்கி தரவில்லை. நான் பசியோடு வீடு வந்து சேர்ந்தேன் என கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

Read More:  எம்.ஜி.ஆர் இறப்புக்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்..!