அக்கா தம்பிக்குள் நடந்த மோசமான உறவு.. வெறியான டாப்ஸி..!
வன்முறை என்பது தமிழ் சினிமாவில் முன்பை விட இப்பொழுது அதிகரித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். முன்பெல்லாம் திரைப்படங்கள் சீரிஸ் என்று வெளிவந்தாலும் குடும்ப கதைகளாக இருக்கும்.
ஆனால் இப்பொழுது எல்லாம் எல்லாமே வன்முறை கதைகளாக இருக்கின்றன. இந்த நிலையில் இயக்குனர் கபில் வர்மா இயக்கத்தில் நடிகை டாப்ஸி, விக்கி அரோகரா, சுகன்யா தண்டா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வெளியான குறும்படம்தான் நீதி சாஸ்தா.
இந்த படத்தின் கதைதான் இப்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது படத்தின் கதை ஆரம்பிக்கும் போது கதாநாயகி டாப்ஸி ஒரு நபருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சண்டைக்கு என்ன காரணம் என்பதாகத்தான் படத்தின் கதை செல்கிறது.
டாப்ஸியின் அம்மா இறந்ததை எடுத்து அவரை பார்ப்பதற்காக பல ஆண்டுகளாக வீட்டுக்கு வராத டாப்ஸியின் தம்பி வீட்டிற்கு வருகிறான் வந்த அந்த தம்பி சும்மா இல்லாமல் அந்த வீட்டில் இருந்த மைதிலி என்கிற பெண்ணை கற்பழித்து கொலை செய்கிறான்.
இதை அடுத்து டாப்ஸி இதுக்குறித்து என்ன முடிவு எடுக்கிறார் என்பதை வைத்து கதை செல்கிறது. அவர் தம்பியை போலீசில் காட்டிக் கொடுக்க போகிறாரா அல்லது காப்பாற்ற போகிறாரா? என்பதாக கதை சொல்கிறது இந்த சீரிஸிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.