என்னை யாராச்சும் காப்பாத்துங்க.. கதறி அழுத விஷால் பட நடிகை.. அட கொடுமையே..!
வெகு காலங்களாகவே சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா. 2005 ஆம் ஆண்டில் இருந்தே இவர் சினிமாவில் நடித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில்தான் முயற்சி செய்தார்.
ஆனால் அவருக்கு பாலிவுட் சினிமாவில் அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அடுத்து அவர் மற்ற சினிமாக்களில் முயற்சி செய்து வந்தார். முதல் படம் பாலிவுட்டில் தோல்வியடைந்ததை அடுத்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்தார் தனுஷ் ஸ்ரீ தத்தா.
2010 ஆம் ஆண்டு தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் இவர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகும் கூட தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை தனுஷ் ஸ்ரீ தத்தா.
அதில் அவர் தன்னுடைய வீட்டிலேயே தான் கொடுமைக்கு ஆளாவதாகவும் தனக்கு உதவும்படியும் கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் அப்படி என்னதான் நடக்கிறது என அதுக்குறித்து இப்போது பேசி வருகின்றனர் ரசிகர்கள்.