News
இனி த்ரிஷான்னு பேசுறதுக்கே எல்லாரும் பயப்படணும்!.. மூன்று படத்தின் சம்பளத்தை நஷ்ட ஈடாக கேட்ட த்ரிஷா!..
Actress trisha: தற்சமயம் தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா குறித்த விஷயம்தான் பெரும் பேசு பொருளாக போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அதிமுக அரசியல்வாதியான ஏவி ராஜு திரிஷாவை 25 லட்ச ரூபாய் கொடுத்து கருணாஸ் அழைத்து வந்து ஒரு அரசியல்வாதிக்கு விட்டதாக அபத்தமாக பேசியிருந்தார்.
இந்த பேச்சு திரிஷாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அதற்கு எதிராக பதிவு வெளியிட்டார் த்ரிஷா. அதனுடன் இல்லாமல் நேற்று ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி இன்னும் 24 மணி நேரத்தில் பிரபல பத்திரிகைகள் முன்னாள் அந்த அரசியல்வாதி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று த்ரிஷா கூறியிருக்கிறார். இதனுடன் இல்லாமல் அவர் ஒரு நஷ்ட ஈடு தொகையை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது எவ்வளவு என்று பார்க்கும் பொழுது 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக அவர் கேட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இது மிகப் பெரிய தொகையாகும் இந்த தொகையை ஏ.வி ராஜு கொடுக்காத பட்சத்தில் சட்டரீதியாக அவர் மீது த்ரிஷா நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது. எனவே அந்த அரசியல்வாதி கண்டிப்பாக இதற்கு பணம் கொடுத்து விடுவார் என்று ஒரு பக்கம் பேச்சு இருந்தாலும் எதற்காக திரிஷா இவ்வளவு பணம் கேட்க வேண்டும் அவரிடம் இல்லாத பணமா என்று சிலர் பேசுகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் திரிஷாவின் ரசிகர்கள் கூறும் பொழுது இவ்வளவு பணத்தை நஷ்ட ஈடாக வாங்கினால்தான் இனி இன்னொருவர் த்ரிஷாவை அவமரியாதையாக பேசுவதற்கு பயப்படுவார்கள் அப்படியான ஒரு நிலையை உண்டாக்கத்தான் த்ரிஷா இவ்வளவு நஷ்ட ஈடு தொகையை கேட்டிருக்கிறார் என்று கூறுகின்றனர்.
