Tamil Cinema News
சங்கடத்தில் சிக்கி வரும் வாணி போஜன். ரிஜெக்ட் ஆகி வரும் திரைப்படங்கள்.. அப்படி நடிக்க சொன்னா எப்படி?
சீரியல் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். பெரும்பாலும் வாணி போஜன் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெறுவதாக இருக்கின்றன. வாணி போஜன் சின்னத்திரையில் தெய்வ மகள் என்கிற சீரியலின் மூலமாக பிரபலமடைந்தார்.
தெய்வமகள் சீரியல் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் வாய்ப்பை பெற்று நடிக்க துவங்கினார் வாணி போஜன். பல வெப் தொடர்கள் மற்றும் படங்களில் நடித்தாலும் ஓ மை கடவுளே திரைப்படம்தான் இவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.
அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. சினிமாவிற்கு வரும்போதே வாணிபோஜன் ஒரு விதிமுறையை வைத்துக்கொண்டுதான் வந்தார். அதாவது எந்த காலக்கட்டத்திலும் கவர்ச்சியாக மட்டும் நடித்துவிட கூடாது.
ஆனால் தமிழ் சினிமாவில் தற்சமயம் முத்த காட்சிகள் என்பது இயல்பாகி விட்டது. எனவே பெரும்பாலும் வாணி போஜனுக்கு திரைப்படங்களில் கவர்ச்சி காட்சிகள் அல்லது முத்து காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பல படங்களை தவிர்த்து வருகிறார்.
இதனால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் என்பது குறைந்துக்கொண்டே வருகின்றன.
