Bigg Boss Tamil
கமல்ஹாசனே பூமர் மாதிரி பேசியிருக்கார்!.. கடுப்பான வனிதா விஜயக்குமார்!..
தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் வாரம் முதலே போட்டியாளர்களுக்கு இடையேயான சண்டைகள் துவங்கிவிட்டன.
முக்கியமாக வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமாருக்கும் விசித்திராவிற்கும் இடையே பிரச்சனை துவங்கி இருந்தது. இந்த நிலையில் ஜோவிகா தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தியது குறித்து பேசிய விசித்திரா, படிப்பின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார்.
ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஜோவிகா அவரது சொந்த வாழ்க்கை விஷயங்களை பேசக்கூடாது என்று விசித்திராவிடம் சண்டை இட்டார். இந்த நிலையில் நேற்று வார இறுதியில் இவர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசும்பொழுது அவரும் கூட படிப்பே முக்கியம் என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் இதனால் வருத்தம் அடைந்த நடிகை வனிதா விஜயகுமார் பேசும்பொழுது இவர்களெல்லாம் பழைய காலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் புதிய தலைமுறைகளை புரிந்து கொள்ள முடிவதில்லை ஆனால் கமல்ஹாசனும் இப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கமலை சேர்த்து பேசி இருந்தார் வனிதா.
