Social Media Bar

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் மட்டும் சினிமாவில் நடக்கும் ரகசிய விஷயங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அப்படியாக அம்பலப்படுத்துவதன் மூலமாக சினிமா துறையினர் மத்தியில் எதிர்ப்பை சந்தித்தாலும் கூட அவர்கள் தொடர்ந்து இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

அப்படியான நபர்களில் பயில்வான் ரங்கநாதன் முக்கியமானவராக இருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் வெகு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் இருந்து வந்தவர் என்பதால் சினிமாவில் நடந்த நிறைய விஷயங்கள் அவருக்கு தெரியும் என்று கூறலாம்.

Read More:  வாய்ப்பில்லை சூரி.. இனிமே அது நடக்காது.. ஓப்பன் டாக் கொடுத்த வெற்றிமாறன்..

இந்த விஷயங்களை ஒரு கட்டத்திற்கு மேல் இவர் youtube சேனல்கள் வழியாக வெளியே சொல்ல துவங்கினார். அது அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது இதனால் பயில்வான் ரங்கநாதனுக்கு இப்பொழுது பெரிதாக திரைத்துறையில் யாருமே வாய்ப்புகள் கொடுப்பது கிடையாது.

இந்த நிலையில் சமீபத்தில் லாரா என்கிற திரைப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பில் கலந்து கொண்டார் பயில்வான் ரங்கநாதன். அவர் படத்தின் இயக்குனரிடம் கேட்கும் பொழுது படத்தில் முத்த காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டார்.

Read More:  டிவி ஷோவில் இறங்கிய மிஸ்கின்.. முதல் நாளே நடந்த அட்ராசிட்டி..!

ஆமாம் கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கு முத்தக் காட்சி இருக்கிறது அதில் நடிப்பதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டார் அந்த காட்சியை மட்டும் ஒரு பத்து தடவை எடுத்தோம் என்று கூறியிருக்கிறார் இயக்குனர். இதை நிலையில் கதாநாயகனிடம் இது குறித்து கேட்ட பயல்வான் ரங்கநாதன் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார்.

ஆமாம் படம் துவங்குவதற்கு மூன்று மாதம் முன்பாக எனக்கு திருமணம் நடந்தது என்று கதாநாயகன் கூறினார். அப்படி என்றால் உங்களுக்கு முத்தம் கொடுப்பது ஒன்றும் தெரியாத விஷயமாக இருக்காது. அப்புறம் ஏன் பத்துமுறை அதை செய்தீர்கள் என்று கேட்டிருந்தார்.

Read More:  அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்ற தனுஷ்..!

அதற்கு பதில் அளித்த கதாநாயகன் எனக்கு முத்தம் கொடுக்க தெரியாது என்று நான் கூறவில்லை பல்வேறு காரணங்களால் அந்த காட்சியை மீண்டும் எடுக்க வேண்டியதாக இருந்தது என்று பதில் அளித்து இருந்தார். மேலும் இந்தக் கேள்வியால் நடிகை வர்ஷினி மனவருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.