தேறி வருகிறேன் மக்களே! – விபத்துக்கு பிறகு போட்டோ வெளியிட்ட அவெஞ்சர் ஹீரோ!


உலக புகழ்ப்பெற்ற அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாக்கய் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெர்மி ரென்னர். அதன் பிறகு வந்த ஹாக்கய் டிவி தொடரில் புது ஹாக்கய் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திவிட்டு அவெஞ்சர்ஸ் சீரிஸில் இருந்து விலகினார்


இந்நிலையில் இரு தினங்களுக்கு காரில் சென்று கொண்டிருந்த ஜெரெமிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. ரோஸ் கி தஹோ மவுண்ட் என்னும் பகுதியில் காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். இப்போது பனிக்காலம் என்பதால் அங்கு அதிகமாக பனி பெய்யும். ரோட்டில் அதிகமான பனி இருந்த காரணத்தால் அவரது கார் வலுக்கி சாலையோரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. அதற்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத நிலையில் தற்சமயம் தான் நலமாகி வருவதாக ஜெர்மி ரென்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தாலும் நல்லப்படியாக ஆபத்து கட்டத்தை தாண்டி பிழைத்துள்ளார் ஜெர்மி. இவர் டிவிட்டரில் தனது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

Refresh