News
நா விட்ருங்கண்ணா! – பிரபல கதாநாயகியை தனி போஸ்ட் போட வைத்த ரசிகர்கள்!
தற்சமயம் தமிழில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா லெட்சுமி இருந்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்கு முன்பு சில படங்கள் நடித்திருந்தபோதும் பூங்குழலி கதாபாத்திரம் அவருக்கு அதிக வாய்ப்பையும் வரவேற்பையும் பெற்று தந்தன. அதை தொடர்ந்து இவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படமும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் தற்சமயம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவராக ஐஸ்வர்யா லெக்ஷிமி இருக்கிறார். இந்த நிலையில் நேற்று இவர் சமூக வலைத்தளங்களில் நடிகர் அர்ஜுன் தாசுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் ஒரு இதயத்தை விட்டிருந்தார்.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என செய்திகள் பரவ துவங்கின. இதனால் மனம் உடைந்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதுக்குறித்து பேசிய ஐஸ்வர்யா “நானும் அர்ஜுன் தாசும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அந்த புகைப்படமும் கூட நட்பு ரீதியாக பகிரப்பட்டதே” என கூறியிருந்தார். எனவே புரளியை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இதனால் தற்சமயம் அவரது ரசிகர்கள் மன நிம்மதியில் உள்ளனர்.
