தலைப்பை கண்டுப்பிடிச்சி பரிசை வெல்லுங்க? – பார்த்திபன் வச்ச டாஸ்க்!

சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இரவின் நிழல். உலகிலேயே வெளியான முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இது என கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்தை நோக்கி பயணித்துக்கொண்டுள்ளார் பார்த்திபன். பொதுவாக ஆக்‌ஷன் மசாலா படங்கள் எடுத்து வரும் இயக்குனராக அல்லாமல் தமிழ் சினிமாவிற்குள் ஒரு மாற்று சினிமாவை கொண்டு வர நினைக்கும் இயக்குனர் பார்த்திபன்.

இதனால் அவரது திரைப்படங்கள் சற்று தனித்துவத்துடன் இருப்பதை காண முடியும். அந்த வகையில் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியிலேயே ஒரு சவாலை விடுத்துள்ளார்.

இதற்காக ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை கொண்டு பார்த்திபன் அடுத்து இயக்கி வரும் திரைப்படத்தின் பெயரை கண்டுப்பிடிக்க வேண்டும். அந்த புகைப்படத்தில் ஒரு திறக்கப்பட்ட புத்தகத்தில் மயிலிறகு இருப்பதை பார்க்க முடிகிறது.

சரியாக படத்தின் பெயரை கண்டுப்பிடிப்பவர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு புடவை வழங்கப்படும் என கூறியுள்ளார். இதுக்குறித்து பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது

“என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும்,அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும்!

“புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்கவா முடியும்” என கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு… கட்டிகிட்டவங்களுக்கு குடுங்க இல்ல கட்டிக்கப் போறவங்களுக்கு குடுங்க! என கூறியுள்ளார்.

Refresh