Connect with us

இப்படியெல்லாம் செய்யக்கூடாது? –  நெல்சனை கண்டித்த ரஜினி!

News

இப்படியெல்லாம் செய்யக்கூடாது? –  நெல்சனை கண்டித்த ரஜினி!

Social Media Bar

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் திரைப்படம் ஜெயிலர். இத படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மிகவும் மும்மரமாக நடந்து வருகிறது. இயக்குனர் நெல்சனுக்கு இது மிக முக்கியமான திரைப்படம் என கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக நெல்சன் உடலை வருத்தி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு மொத்தமே 4 மணி நேரம்தான் உறங்குகிறார் நெல்சன் என கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே இவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. இந்த நிலையில் ஜெயிலர் படமும் ஒழுங்காக ஓடவில்லை என்றால் அது அவரது தொழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் இந்த விஷயம் எப்படியோ ரஜினியின் காதுக்கு சென்றுள்ளது. இதனால் நெல்சனை சந்தித்த ரஜினி, இது எல்லாம் ரொம்ப தப்பு. ஒரு படம் ஓட வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக ஓடு. அதற்காக எல்லாம் நம்மை வருத்திக்கொள்ள கூடாது, ஜெயிலர் நன்றாக ஓடும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே ஓய்வில்லாமல் வேலை செய்ய கூடாது என கூறி எச்சரித்துள்ளார் ரஜினி.

இந்நிலையில் படக்குழுவும் கூட படம் நல்லப்படியாக வரும் கவலைக்கொள்ள வேண்டாம் என ஆறுதல் கூறி வருகிறது.

Bigg Boss Update

To Top