News
அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸ்.. ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவால் ஆடிப்போன ரசிகர்கள்..!
சினிமாவில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் ஒரு சில நடிகைகளின் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னதிரையில் வந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த வரவேற்பை பயன்படுத்தி சினிமாவிற்குள்ளும் வந்தார். பொதுவாக சினிமாவிற்குள் வரும் நடிகைகள் டெம்ப்ளேட்டாக ஒரே மாதிரி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை பார்க்க முடியும். கொஞ்சம் கஷ்டமான கதாபாத்திரங்களை கூட தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டார்கள்.
அம்மாவாக வரவேற்பு:
நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை கண்டிப்பாக எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை என்கிற திரைப்படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார்.

ஒரு நடிகை சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே தாயாக நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தாயாக நடித்து அதனை தொடர்ந்துதான் அவருக்கு வரவேற்பு அதிகமாக கிடைக்க தொடங்கியது.
தெலுங்கில் எண்ட்ரி:
இந்த நிலையில் தமிழில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். தெலுங்கில் நட்சத்திர ஹீரோவான நடிகர் வெங்கடேஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

வெங்கடேஷ் மிகவும் வயதில் மூத்த நடிகர். ரஜினிகாந்த் காலகட்டத்தில் இருந்தே இவரும் தெலுங்கு சினிமாவில் இருந்து வருபவராவார். அப்படி இருக்கும் பொழுது இவருக்கு மகளாக வேண்டுமானால் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கலாம்.
ஜோடியாக எப்படி நடக்கிறார் என்பது பலருக்கு குழப்பமாக இருக்கிறது ஆனால் மூத்த கதாபாத்திரங்களில் நடிப்பது ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஒன்றும் புதிய விஷயமில்லை என்பதால் அவர் கண்டிப்பாக நடிப்பில் முழு திறமையை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
