Bigg Boss Tamil
பிக்பாஸ் வீட்டுக்கு போய் ஒரே அசிங்கமா போச்சு.. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு நடந்த சம்பவம்..!
கருப்பு நிறத்தில் இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நடிகையாக முடியும் என்று எல்லா காலங்களிலும் சில நடிகைகள் நிரூபித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வளர்ந்த பிறகு கூட மீண்டும் தமிழ் சினிமாவில் அதை நிரூபித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்பொழுது தனது தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பிறகு அதிகமாக இந்த கருப்பு நிறத்தின் காரணமாக கிண்டலுக்கு உள்ளானார். பொதுமக்கள் பெரிதாக அவரை கிண்டல் செய்யவில்லை என்றாலும் கூட சினிமா வட்டாரத்தினர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்தனர்.
இதனால் பிறகு நிறைய சிகிச்சைகளை மேற்கொண்டு தற்சமயம் வெள்ளை ஆகி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்சமயம் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் பெற்று வருகிறார். பெண்களை அடிப்படையாக கொண்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
உண்மையை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்:
ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இவரது தம்பியான மணிகண்டன் போன பிக் பாஸ் சீசன் இல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அந்தப் போட்டிக்கு சென்ற அனுபவத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
எனது தம்பியை பார்ப்பதற்காக சர்ப்ரைஸ் ஆக நான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே பிக் பாஸ் அறையில் என்னை அமர வைத்து இருந்தனர். எனது தம்பி என்னை பற்றி கேட்கும் பொழுது நான் என்ட்ரி கொடுக்கலாம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் எனது குடும்ப உறுப்பினரை பார்த்து பேசிய தம்பி என்னை பற்றி கேட்கவே இல்லை. எனக்கு ஒரே அசிங்கமாக போய்விட்டது அதனால் நான் போகவில்லை சார் என்று கூறினேன். இருந்தாலும் அவர்கள் கேட்காமல் என்னை அனுப்பி வைத்தனர் பிறகு அங்க போய் அவங்கிட்ட நான் சண்டை போட்டேன் என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
