ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒருமுறையும் அஜித்துக்கு நடக்கும் விசித்திர நிகழ்வு.. இந்த வாட்டியும் நடந்திருக்கு..!
1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அஜித். அப்போது துவங்கி இப்போது வரை அஜித்துக்கு சினிமாவில் இருக்கும் மார்க்கெட் என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தப்பாடில்லை.
இத்தனைக்கும் அஜித்துக்கு என்று ரசிகர் மன்றங்கள் கிடையாது. அவர் எந்த பொது நிகழ்சிக்கும், விருது வழங்கும் விழாக்களுக்கும் வருகை தர மாட்டார். அப்படி எல்லாம் இருந்தும் கூட அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் குறைவதே இல்லை.
சமீபத்தில் அஜித் கார் ரேசில் கலந்துக்கொண்டப்போது கூட அவருடைய ரசிகர்கள் அங்கும் வருகை புரிந்திருந்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒருமுறையும் அஜித்துக்கு ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் நடந்து வருவதாக அஜித் ரசிகர்கள் கூறுகின்றனர்.
அதன்படி இது 2005 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக துவங்கியது. 2005 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஒரே திரைப்படம் ஜீ திரைப்படம் மட்டும்தான். இந்த திரைப்படம் பிப்ரவரி 11 அன்று வெளியானது. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்தார்.
அடுத்து 10 வருடங்கள் கழித்து 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி என்னை அறிந்தால் திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷாதான் நடித்திருந்தார்.
அதற்கு பிறகு மீண்டும் 10 வருடங்கள் கழித்து 6 பிப்ரவரி 2025 அன்று விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷாதான் நடித்துள்ளார்.
இதில் இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் இந்த மூன்று படங்களுமே பொங்கலுக்கு திட்டமிடப்பட்டு பிறகு சில காரணங்களால் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. எனவே அஜித்துக்கு 10 வருடத்திற்கு ஒருமுறை இப்படி நடப்பது விசித்திரமாக உள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.