Connect with us

ஏது க்ளைமேக்ஸே எழுதலையா!.. இயக்குனரின் செயலால் கடுப்பான அஜித்!..

Cinema History

ஏது க்ளைமேக்ஸே எழுதலையா!.. இயக்குனரின் செயலால் கடுப்பான அஜித்!..

Social Media Bar

தமிழில் உள்ள டாப் திரை பிரபலங்களில் முக்கியமானவர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்கள் யாவும் பெரும் வெற்றியை பெறுகின்றன. அதே போல அவருக்கென ஒரு பெரிய ரசிக பட்டாளமே இருந்து வருகிறது. பல இயக்குனர்கள் அஜித்தை வைத்து படம் இயக்க முடியாதா? என காத்துக்கொண்டுள்ளனர்.

அந்த அளவிற்கு பெரும் நடிகராக இருந்தாலும் அவரது மதிப்பை அறியாத இயக்குனர்களும் உண்டு. அப்படியான ஒரு சம்பவத்தை இயக்குனர் கெளதம் மேனன் செய்துள்ளார். 2015 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் என்னை அறிந்தால், த்ரிஷா, அனுஷ்கா என பெரும் ரசிக பட்டாளமே அந்த படத்தில் நடித்திருந்தது.

பொதுவாக கெளதம் மேனன் திரைப்படத்தின் கதையை எழுதும்போது அதன் க்ளைமேக்ஸை எழுத மாட்டார். இதே போலவே என்னை அறிந்தால் படத்திற்கும் கூட இவர் க்ளைமேக்ஸ் காட்சிகளை எழுதவில்லை. இதனையடுத்து க்ளைமேக்ஸ் தவிர பாக்கி காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டன.

ஆனால் வெகு மாதங்கள் ஆன பிறகும் க்ளைமேக்ஸ் காட்சியை மட்டும் எடுக்கவே இல்லை. இதனால் கடுப்பான அஜித் தயாரிப்பாளரிடம் பேசினார். பிறகு தயாரிப்பாளர் கூறிய பிறகே படத்தின் க்ளைமேக்ஸை எடுத்துள்ளார் கெளதம் மேனன்.

To Top