Tamil Cinema News
மோசமான கார் விபத்துக்கு இதுதான் காரணம்.. விபத்தில் அஜித் சிக்க இதுதான் காரணம்..!
கடந்த சில வருடங்களாகவே நடிகர் அஜித் சினிமாவின் மீது பெரிதாக ஆரவம் இல்லாமல் இருந்து வருகிறார் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் தொய்வு தெரிந்தது.
இந்த நிலையில் பைக்கிலேயே உலகை சுற்ற போகிறேன் என்று கிளம்பினார் அஜித். அதனை தொடர்ந்து சில நாட்கள் திரைப்படங்களில் எல்லாம் நடிக்காமல் இருந்தார் அஜித். இனி அஜித் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்றே அப்போது பலரும் நினைத்து வந்தனர்.
இந்த நிலையில் தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் கார் ரேஸ் பக்கம் சென்றுவிட்டார் அஜித். இந்த நிலையில் தன்னுடைய காரில் நேற்று சோதனை ஓட்டம் பார்த்து கொண்டிருந்தப்போது அவரது கார் விபத்துக்குள்ளானது.
இந்த் விபத்தில் காரின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டது. ஆனால் நல்லவேளையாக அஜித்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரில் திடீரென ஏற்பட்ட எந்திர கேளாறுதான் இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆனால் இன்னமும் இந்த விபத்து குறித்த அதிகாரபூர்வ தக்வல்கள் வெளியாகவில்லை.
