News
அட போங்கப்பா டைம் முடிஞ்சு போச்சு!.. லைக்காவிற்கு டாடா காண்பிச்சுட்டாரா தல!.. என்ன நடந்தது!.
துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த விடாமுயற்சியின் படப்பிடிப்பு மட்டும் எதிர்பார்த்ததை விடவும் அதிக நாட்களுக்கு படமாக்கப்பட்டு கொண்டு வருகிறது.
இதற்கு நடுவே நடிகர் விஜய் லியோ என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படமும் திரைக்கு வந்து ஓடியே விட்டது. ஆனால் இன்னமும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு முடிந்தப்பாடில்லை. லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
லைக்கா நிறுவனமானது இந்தியன் 2 மற்றும் 3, லால் சலாம், வேட்டையன், விடாமுயற்சி ஆகிய பெரிய பட்ஜெட் படங்களை வரிசையாக படமாக்கியது. இதனால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது லைக்கா. லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

எனவே இந்தியன் 2 திரைப்படம் கொடுக்கும் வெற்றியை வைத்துதான் விடாமுயற்சியின் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என காத்துள்ளதாம் லைக்கா நிறுவனம். ஆனால் தற்சமயம் இந்தியன் 2வும் குறிப்பிட்ட தேதியில் வெளியாவது சந்தேகம் என பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் அடுத்து அஜித் நடிக்கவிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கிவிட்டனராம். திரும்ப பண வசதி ஏற்பட்ட பிறகு தன்னை அழைக்குமாறு கூறிவிட்டு அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டாராம் அஜித். இப்படியாக இணையத்தில் ஒரு செய்தி வலம் வந்த வண்ணம் உள்ளது.
