Tamil Cinema News
காலை வாரிவிட்ட இசையமைப்பாளர்.. தவிக்கும் அஜித் படம்.. களத்தில் இறங்கும் மெலோடி கிங் இசையமைப்பாளர்.!
கடந்த இரண்டு வருடங்களாகவே நடிகர் அஜித் நடிப்பில் பெரிதாக திரைப்படம் என்று எதுவும் வெளிவராமல் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அஜித் சமீபத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளிவராமல் போனதுதான்.
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை அந்த படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி வெகு நாட்களுக்கு இருந்ததால் அந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த நிலையில் அஜித் அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.
அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் 70% படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு திரையுலகில் முக்கியமான இசையமைப்பாளராக இருக்கிறார்.
இசையமைப்பாளரில் மாற்றம்:
அதனால் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசையமைத்து வருவதால் இன்னமும் அஜித் படத்திற்கு இசையமைத்து தராமல் இருந்து வருகிறார். இன்னமும் குட் பேட் அக்லி படத்திற்கு பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கூட இயக்குனர் தாமாகவே மூன்று பாடல்களை ஏற்கனவே படம் பிடித்து வைத்து விட்டார்.
இந்த நிலையில் அந்த வீடியோவிற்கு தகுந்த மாதிரி பாடல்கள் தேவையாக இருக்கிறது. ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத் இன்னமுமே எந்த ஒரு பாடலும் கொடுக்கவில்லை இதனை அடுத்து ஜிவி பிரகாசிடம் சென்று உதவி கேட்டு இருக்கின்றனர் படக் குழுவினர்.
இந்த விஷயத்தை அறிந்த ஜிவி பிரகாஷ் ஒரு வாரத்திற்குள் படத்திற்கான நான்கு பாடல்களை போட்டு கொடுத்து விடுகிறேன் மீதத்தை அடுத்த ஒரு வாரத்தில் போட்டுக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார் இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளராக அடுத்த ஜிவி பிரகாஷ் இருப்பார் என்று கூறப்படுகிறது.
