சும்மா கூட அப்படி காட்டாத மனுஷனை!.. அஜித் பட ஃபர்ஸ்ட் லுக்கால் மனம் வருந்தும் ரசிகர்கள்!..

துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படம் துவங்கி கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே அதன் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன.

அஜித் உலக சுற்றுலா சென்று வந்த உடனேயே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனாலும் இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை. அதே சமயம் இந்த மாதத்திற்குள் விடாமுயற்சி திரைப்படத்தை முடிக்க வேண்டும் என்று அஜித் ஏற்கனவே லைகா நிறுவனத்திடம் கூறியிருந்தாராம்.

Social Media Bar

ஆனாலும் நிதி பிரச்சனை காரணமாக லைக்கா நிறுவனம் அஜித் படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் தள்ளிப்போட்டது. எனவே விடாமுயற்சி திரைப்படத்தில் லேட்டாக நடித்துக்கொள்ளலாம் என அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார் அஜித்.

தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் ஆபாசமான விஷயத்தை குறிக்கும் வகையில் அஜித் கை விரலை காட்டியிருக்கும் குறியீடு அஜித் ரசிகர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் ஓட்டு போட்டுவிட்டு விரலை காட்டும்போது கூட ஒரு விரலை தனியாக காட்ட மாட்டார். அது தவறு என மொத்த விரல்களையும் சேர்த்துதான் காட்டுவார். அவரை போய் ஒரு விரலை ஆபாச குறியீட்டில் காட்ட வைத்து போட்டோ வெளியிட்டுள்ளார்களே என பேசி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.