News
அந்த விஷயத்துல அஜித்திற்கு பயங்கர செண்டிமெண்ட்!.. 20 லட்ச ரூபாய் பைக்கை ரோட்டுலையே விட்டுட்டு போயிடுவார்!..
சினிமாவிற்கு வந்த காலக்கட்டம் முதலே பைக் ரேசிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருபவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் அதிகமாக பைக் ரேஷ்களில் கலந்துக்கொண்டு வந்தார்.
ஆனால் அதில் அதிக ஆபத்து ஏற்படுவதால் பிறகு பைக் பந்தயங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டார். தற்சமயம் பைக்கை கொண்டு உலகம் முழுக்க சுற்றுலா சென்று வருகிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள் மீது ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
அப்படி அஜித்திற்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொருள்தான் பைக். அதிகமாக அஜித் உயர் ரக பைக்குகளை வாங்கி வைத்துள்ளார். ஆனால் செண்டிமெண்டாக அஜித்திற்கு ஒரு மூடநம்பிக்கை உண்டு என்கிறார் பத்திரிக்கையாளர் அந்தணன்.

படப்பிடிப்பு தளத்திலும் சரி, பயணங்கள் செல்லும்போதும் சரி அவர் செல்லும் பைக்கின் டயர் வெடித்துவிட்டால் பிறகு அந்த பைக்கை ஓட்ட மாட்டாராம். எங்கு டயர் வெடித்ததோ அங்கேயே பைக்கை விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவாராம்.
தன்னை சேர்ந்தவர்களும் அந்த பைக்கை எடுக்க கூடாது. வேறு யாராவது எடுத்து செல்லட்டும் என கூறிவிடுவாராம் அஜித். இது விசித்திரமான பழக்கமாக இருந்தாலும் ஒருமுறை அப்படி நடந்துவிட்டால் அந்த பைக் அபசகுணம் என்பது அஜித்தின் நம்பிக்கையாக இருக்கிறது.
எனவே அவர் இந்த விஷயத்தை பின்பற்றுவதாக வலைப்பேச்சு அந்தணன் கூறுகிறார்.
