லீக் ஆன சில்லா சில்லா துணிவு பாடல்! – பாட்டு ஒரு மார்க்கமா இருக்கே..!

பல வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்தும் விஜய்யும் போட்டி போட்டு வெளியிடவிருக்கும் திரைப்படங்களாக துணிவும் வாரிசும் இருக்கின்றன.

Social Media Bar

படத்தின் ப்ரோமோஷனுக்காக பல விதமான விஷயங்களை இரு தரப்பில் இருந்தும் செய்து வருகின்றனர். அதன் முதல் வேலையாக படத்தின் முதல் பாடலை வெளியிட்டது வாரிசு குழு.

ரஞ்சிதமே ரஞ்சிதமே என்கிற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஒரு வாரத்திற்கு சமூக வலைத்தளங்கள் முழுவதுமே விஜய் அலை பரவி வந்தது.

எனவே துணிவு குழுவும் சில்லா சில்லா என்கிற பாடலை வெளியிட திட்டமிட்டனர். இந்த பாடலை அனிரூத் பாடியுள்ளார். பாடல் வெளியாவதற்கு முன்பாகவே அந்த பாடலின் ஒரு பகுதி மட்டும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதனால் முழு பாடல் எப்போது வரும் என பலரும் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் சிலர் இந்த பாடல் அவ்வளவாக சிறப்பாக இல்லை. ஒரு மார்க்கமாக உள்ளது என கூறி வருகின்றனர்.