விஜய்யை நேரடியாக தாக்கி அஜித் விட்ட அறிக்கை..!
நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் விஜய்யும் அஜித்தும் அவர்கள் நடிக்கும் படங்களை ஒரே நாளில் வெளியிட்டு போட்டி போட்டுக் கொள்வது வழக்கமான விஷயமாக இருந்து வந்தது.
இவர்கள் இப்போது தங்கள் கனவுகளை நோக்கி ஓட துவங்கியிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். விஜயை பொறுத்த வரை அவர் அரசியலை நோக்கி பயணப்பட தொடங்கிவிட்டார். அதேபோல அஜித்தை பொருத்தவரை அவர் கார் ரேஸ் மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இது இல்லாமல் அவ்வப்போது வந்து நடித்துக் கொடுப்பேன் என்று அஜித் கூறியுள்ளார். விஜய்யை பொருத்தவரை இனி திரும்ப அவர் நடித்து கொடுப்பதாக இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் சினிமாவிற்கு வந்து 33 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் அஜித் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அது குறித்த விஷயங்கள்தான் இப்போது சர்ச்சை ஆகி வருகிறது. அந்த பதிவில் அஜித் கூறும்பொழுது என்னுடைய ரசிகர்களை எப்பொழுதுமே சுயநலத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இது நடிகர் விஜய்யை தாக்கி பேசிய ஒரு பதிவாக பார்க்கப்படுகிறது ஏனெனில் விஜய் ரசிகர் மன்றம் மூலமாகதான் தனது அரசியல் கட்சியை வளர்த்து எடுத்தார். ரசிகர்கள் மூலமாகதான் இப்பொழுது அந்த கட்சியை கொண்டு சென்று கொண்டும் இருக்கிறார்.
அப்படி இருக்கும் பொழுது அஜித் தன்னுடைய ரசிகர்களை சுயநலத்திற்கு பயன்படுத்த மாட்டேன் என்று கூறியது நேரடியாக விஜய்யை தாக்கிய பதிவாக பார்க்கப்படுகிறது எனவே இது குறித்து இப்பொழுது சர்ச்சை கிளம்ப துவங்கி இருக்கிறது.