ரசிகர்களால் அஜித்துக்கு வந்த பாதிப்பு.. அறிக்கை வெளியிட காரணமாக இருந்த அரசியல் பிரச்சனை..!
எப்போதுமே மற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிகர் அஜித் மட்டும் தான் தொடர்ந்து ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுத் தந்து வருகிறார். எப்போதுமே அஜித் கூறுவதெல்லாம் ஒவ்வொரு ரசிகர்களும் அவர்களது குடும்பத்தை நல்லபடியாக பார்க்க வேண்டும் என்பதுதான்.
அதனால்தான் அஜித் அவருக்கென்று ரசிகர் மன்றம் கூட வைத்துக் கொள்ளவில்லை. ரசிகர்கள் இப்படி மோசமாக செய்யும் விஷயங்களே அவர்களது வாழ்க்கையை பெரிதாக பாதிக்கும் என்பதை அஜித் அறிந்து இருக்கிறார்.
ஆனாலும் கூட அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே இருக்கின்றனர். அப்படியாக சமீப காலமாக பொது இடங்களில் கடவுளே அஜித்தே என்கிற வசனத்தை கூறிக் கொண்டே இருக்கின்றனர். ஆரம்பத்தில் இதை அஜித் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் நிறைய இடங்களில் இது நடப்பதை பார்த்து இப்பொழுது இதற்கு பதில் அளித்து இருக்கிறார்.

அஜித் வெளியிட்ட அறிக்கை:
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் எனக்கு முன்பு ஒரு பெயரை போடுவது என்பது எனக்கு பிடிக்காது. இந்த மாதிரி எல்லாம் செய்யாதீர்கள் உங்களது குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தார் அஜித்.
ஏன் இப்படி பதில் ஒன்றை அளிக்க வேண்டும் என்று பார்க்கும் பொழுது நிறைய அரசியல் கட்சி தலைவர்கள் செல்லும் பொழுது கூட இந்த மாதிரி கடவுளே அஜித்தே என்கிற வசனத்தை கூறி இருக்கின்றனர் அவரது ரசிகர்கள் இது அரசியல் சார்ந்து அஜித்துக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் இப்பொழுது அஜித் இதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.