Tamil Cinema News
அஜித் கொடுத்த பளேர் அடி.. மண்ட பத்திரம்.. பொறுப்பில்லாம இருக்க கூடாது.!
நடிகர் அஜித் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க கூடியதாகதான் இருந்து வந்துள்ளன. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் இப்போது வரை திரைப்படங்களே வராமல் இருந்து வருகிறது.
நடிகர் அஜித் தற்சமயம் ரேஸ்களில் எல்லாம் கலந்துக்கொண்டு வருகிறார். அதனாலேயே அவர் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.
அவருடைய நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு என்பதும் இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கார் பந்தயத்தில் கலந்துக்கொண்ட அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றியை கண்டது.
அஜித்தை பார்த்து பலருக்குமே இந்த ரேஸ் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்து அஜித் அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறும்போது சாலையில் முட்டாள்தனமான சாகசங்கள் செய்வதை காட்டிலும் ரேஸ் சர்க்யூட்டில் ஓட்டுவது மிகவும் பாதுகாப்பானது.
நிறைய இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். அவர்கள் பொறுப்பற்ற வகையில் செயல்படுவதால் மக்களின் உயிருக்குமே கூட ஆபத்து ஏற்படுகிறது என இதுக்குறித்து அஜித் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
ரேஸ் விடுகிறேன் என மக்கள் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்வ கோளாறுகளை இதன் மூலம் நேரடியாக தாக்கியுள்ளார் அஜித் என இந்த விமர்சனத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.