Connect with us

மூன்று முறை வாய்ப்பு கிடைத்தும் பாலா படத்தில் நடிக்காத அஜித்.. இதுதான் காரணம்!..

ajith bala

Cinema History

மூன்று முறை வாய்ப்பு கிடைத்தும் பாலா படத்தில் நடிக்காத அஜித்.. இதுதான் காரணம்!..

Social Media Bar

Actor Ajith and Bala : ஒரு இயக்குனருக்கு முதல் படம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். முதல் படம் கொடுக்கும் வெற்றியே அந்த இயக்குனர் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனலாம். அப்படி இயக்குனர் பாலாவிற்கு தமிழ் சினிமாவில் முதல் படமாக அமைந்த திரைப்படம் சேது.

எதிர்பார்க்காத ஒரு வெற்றியை தமிழ் சினிமாவில் கொடுத்த திரைப்படம் சேது என கூறலாம். இந்த நிலையில் சேது திரைப்படத்தின் வெற்றியைக் கண்ட அஜித் பாலாவுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தை நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த சமயத்தில் ஒரு தயாரிப்பாளரும் அஜித் நடிப்பில் பாலா இயக்கத்தில் திரைப்படம் தயாரிக்க ஆவலாக இருந்தார்.

எனவே பாலாவிடமும் அஜித்திடமும் இது குறித்து பேசினார் இருவரும் அதற்கு ஒப்புக்கொண்ட பின் பாலா கதையை எழுத தொடங்கினார். கதை சொல்வதைப் பொறுத்தவரை பாலா படத்தின் முழு கதையையும் ஹீரோவாக நடிக்கும் நடிகரிடம் கூற மாட்டார். எனவே அஜித்தை நேரில் சந்தித்து கதையை கூறிய பொழுது சுருக்கமாக கதையை கூறினார் பாலா.

ajith
ajith

மேலும் பாலாவின் நடவடிக்கையும் கொஞ்சம் அஜித்திற்கு அதிருப்தியாக இருந்தது. எனவே அஜித் அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் இதனால் அந்த திரைப்படம் உருவாகவே இல்லை. அதன் பிறகு பாலா இயக்கத்தில் நந்தா திரைப்படம் வெளியாகி அதுவும் பெரும் வெற்றியை கொடுத்தது

இதற்கு பிறகு மீண்டுமொரு முறை அஜித் பாலாவோடு சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் போன முறை போலவே இந்த முறையும் பாலா சுருக்கமாகவே தனது கதையை கூறினார். இருந்தாலும் அஜித் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் படத்தின் தயாரிப்பாளர் அப்போது படத்தில் இருந்து விலகிவிட்டார்.

naan-kadavul
naan-kadavul

இதனால் அந்த படமும் உருவாக்கவில்லை பிறகு மூன்றாவது படமாக பிதாமகன் படம் வெளியாகி அது தேசிய அளவிலான விருதைப் பெற்ற பிறகு மீண்டும் அஜித் பாலாவுடன் சேர்ந்து நடித்த ஆசைப்பட்டார். இந்த முறை தயாரிப்பாளரும் நல்ல பெரிய தயாரிப்பாளராகவே கிடைத்துவிட நான் கடவுள் திரைப்படத்திற்கான கதையை எழுதினார் பாலா.

இந்த திரைப்படத்தில் அஜித் நடிப்பதற்காக அஜித்தை தாடி வளர்க்க சொல்லி இருந்தார் பாலா. இதனால் இரண்டு வருடம் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் தாடி வளர்த்து வந்தார் அஜித். ஆனால் அந்த படத்திற்கான படப்பிடிப்பை பாலா தாமதப்படுத்தி கொண்டே வந்ததால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் இப்படி மூன்று முறை அஜித் பாலா இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டும் அது நிறைவேறாமலே போனது.

To Top