News
முதல் படத்துல துவண்டு போன அஜித்க்கு ஆறுதல் சொன்ன நபர்… வளர்ந்த பிறகு அஜித் செய்த கைமாறு.. யாருமே பண்ணியிருக்க முடியாது!.
தமிழ் சினிமாவில் தற்போது கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் முன்னணி நடிகர் அஜித். இவர் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்த போதும் இவரின் படம் வெளியாகிறது என்றால் அது அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.
அந்த வகையில் நடிகர் அஜித் சினிமாவில் பல கஷ்டங்களைக் கடந்து தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்குள் நடிக்க வரும் போது நடந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்
தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித்.
மெக்கானிக்காக வாழக்கையை தொடங்கிய அஜித், விளம்பர படங்களில் நடித்து வந்தார். இவரின் ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் ஏகே என்று அன்போடு அழைத்து வருவார்கள். இவருக்கு நடிப்பதை விடவும் கார், பைக் பந்தயங்களில் பங்கு பெற்றுக் கொள்ள அதிகம் விரும்புவார்.

ஆரம்பத்தில் சினிமாவில் நிலைத்து நிற்க பல கஷ்டங்களை அனுபவித்த அஜித், அதன் பிறகு நடித்த படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, வில்லன், அட்டகாசம், பூவெல்லாம் உன் வாசம், மங்காத்தா, பில்லா போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படங்களாகும்.
ஆரம்ப காலகட்டத்தில் இவரை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஒரு நடிகர் என்றால் அது அஜித் குமார் தான்.
நடிகர் அஜித் செய்த உதவி
நடிகர் அஜித் கல்லூரி வாசல் என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் பிரசாந்த் நடித்தார். பிரசாந்த் அப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், வெற்றி படங்களை கொடுத்தவராகவும் இருந்தார். இதனால் அந்த படப்பிடிப்பின் போது கல்லூரி பெண்கள் அனைவரும் நடிகர் பிரஷாந்திடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.
ஆனால் அந்தப் படத்தில் நடித்த அஜித் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தார். அவரை யாருக்கும் அப்பொழுது தெரியவில்லை. ஆனால் அங்கு வந்த ஒரு நபர் மட்டும் உங்களிடம் யாரும் ஆட்டோகிராப் வாங்கவில்லையா என கேட்டுள்ளார். அதற்கு அஜித் என்ன எல்லாம் யாருக்கும் தெரியாது சார். அவர் சினிமாவில் பெரிய ஆள். பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். என்னை எல்லாம் யார் கண்டு கொள்வார்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த நபரோ நீங்கள் ஒன்னும் கவலைப்படாதீங்க சார், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் நீங்கள் நிச்சயம் இடம் பெறுவீர்கள் நம்புங்கள் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அதன் பிறகு ஆசை திரைப்படம் வெளிவருகிறது. அஜித்தை அனைவரும் கொண்டாடினார்கள். மேலும் பல ரசிகர், ரசிகைகள் அவருக்கு உருவானார்கள். இந்நிலையில் அஜித் கூறும் போது என்னை அந்த நபர் கண்டிப்பாக ஒரு நல்ல நடிகனாக வருவேன் என கூறினார். அவர் யார் என்று தெரியவில்லை என சொன்னார்.
அதன் பிறகு அந்த நபரை அஜித் கண்டுபிடித்து, தன்னுடன் மேனேஜராக வைத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் தற்போது அஜித்தை பற்றி வைரலாகி வருகிறது.
