News
அழுகை என்னும் அருவியில்… அந்த ஒரு சம்பவத்தால் மனம் நொந்த அஜித் ரசிகர்கள்!..
Ajith Kumar: தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் அஜித்.
அஜித்தை அவரின் ரசிகர்கள் தல என்று அன்போடு அழைத்து வருவார்கள். அவரின் திரைப்படங்கள் பற்றிய அப்டேட் வெளிவந்தால் அது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தும்.
தனது ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்து விட்ட பிறகும் அஜித் ரசிகர்கள் அவரின் படத்தைப் பற்றிய அப்டேட் கிடைத்துவிட்டால் சமூக வலைதளங்கள் முதல் அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பார்கள்.
அஜித் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இருப்பதில்லை. மாறாக அவர் மற்ற நடிகர்களைப் போல எந்த ஒரு பட விழா ப்ரோமோஷன்களிலும் கலந்து கொள்ள மாட்டார்.
அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்
தற்போது சமீபத்தில் அஜித்தின் துணிவு படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் துணிவு படத்திற்கு முன்பாக தொடங்கப்பட்ட விடாமுயற்சி இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி பற்றிய அப்டேட் குறித்த எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டு இருந்தார்கள்.
விடாமுயற்சிக்கு போட்டியா அமரன்?
இந்நிலையில் அஜித் நடித்த விடாமுயற்சி இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வருடம் தீபாவளிக்கு அமரன் ரிலீஸ் ஆக போவதாகவும் அதனால் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர்.
மேலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகினால் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தள்ளி போக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
எனவே அமரன் திரைப்படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என்று சிவகார்திகேயனும், அமரன் திரைப்படம் வெளியானால் விடாமுயற்சி படம் வெளியாவதில் சிக்கல் வரும் என அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
