News
போலீஸ் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்!.. அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த பிரச்சனை!..
தமிழில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு பெரும் ரசிகப்பட்டாளம் இருப்பதாலேயே அவருக்கான சம்பளமும் அதிகரித்து வருகிறது.
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை தயாரிப்பதில் லைகா நிறுவனம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. லைகா தயாரிப்பில் வந்த லால் சலாம் திரைப்படம் தோல்வியை கண்டது. இதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது லைகா.

ஏற்கனவே லைகா தயாரித்து வரும் வேட்டையன், இந்தியன்2 மற்றும் இந்தியன் 3 இன்னமும் திரையரங்கிற்கு வரவில்லை. அது வெளிவந்தால்தான் அஜித் படத்தை முடிக்க முடியும் என்கிற நிலை உள்ளது. எனவே குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் கமிட் ஆனார் அஜித்.
ஏனெனில் லைகாவை விடவும் இது கொஞ்சம் பெரிய தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர் ஒருவர் மீது காவல்த்துறை வழக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டாராம்.
ஒருவேளை இது பெரிய பிரச்சனையாக வெடிக்கும் பட்சத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் இயக்குவதில் பிரச்சனை வரும் என கூறப்படுகிறது.
